தற்போது மெசேஜ் சாட்டிங் பயன்பாட்டிற்காக ஒரு பில்லியனுக்கும் மேற்பட்டோர் உபயோகப்படுத்துவது ‘வாட்ஸ்அப்’. வாட்ஸ்அப் போன்றே அதற்கு மாறாக இந்த 6 ஆப்பை அறிமுகப்படுத்தியுள்ளனர்.
1. ஹைக்
இந்தியாவில் 100 மில்லியன் பயனர்களை கொண்ட ‘ஹைக்’ ஆஃப்லைன் சாட்டிங் வசதி, சிறந்த ஸ்டிக்கர் சேகரிப்பு, ஹைக் இல்லாத பயனர்களிடையே சாட்டிங் வசதி போன்ற அம்சங்களை கொண்டுள்ளது. ஆண்ட்ராய்டு, ஐஒஎஸ், விண்டோஸ் போன்ற ஸ்மார்ட்போன்களில் இவ்வசதியை பெறலாம்.
2. காகோ டாக்
இந்தியாவில் மிகவும் பரவலாக அறியப்பட்ட மற்றொரு சாட்டிங் ஆப் ‘காகோ டாக்’. இது 15 மொழிகளில் உள்ளது. இதில் உள்ள வீடியோ கால் போன்ற எண்ணற்ற வசதிகள் வாட்ஸ்அப்பில் இல்லை. மேலும் அனிமேஷன் எமோட்ஐகான்ஸ் போன்ற வசதிகளை பெற வாட்ஸ்அப் போன்று தொலைபேசி எண் அவசியம் இல்லை காடாக் ஐடி ஒன்றே போதும். காகோ டாக் ஆப்பை ஆண்ட்ராய்டு, ஐஒஎஸ், படா ஒஎஸ், விண்டோஸ் போன்ற ஸ்மார்ட்போன்களில் இவ்வசதியை பெறலாம்.
3. பேஸ்புக் மெசன்ஜெர்
கடந்த சில ஆண்டுகளில் உடனடி செய்தி பிரிவில் முன்னேற்றம் அடைந்துள்ளது ‘பேஸ்புக் மெசன்ஜெர்’. சாட்டிங் மட்டுமின்றி ஸ்டிக்கர்கள் இங்கு ஏராளம். இதில் உள்ள கேம்களுக்கு பலர் அடிமை என்றே கூறலாம். வீடியோ கால், குருப் சாட்டிங் போன்ற பல பயன்பாடுகள் இதில் உள்ளன.
4. லைன்
வாட்ஸ்அப் க்கு மற்றொரு போட்டியாக உள்ளது ‘லைன்’. இதில், 1 ஜிபி வரை உள்ள பைல்களை துரிதமாக மற்றவருக்கு அனுப்ப இயலும். மேலும் இதில் டைம்லைன், கூப்பன்ஸ், வீடியோ ஸ்னாப்பிங் போன்ற எண்ணற்ற வசதிகள் இதில் உள்ளன.
5. பிபிஎம்
பிளாக்பெர்ரி மெசன்ஜெர் எனப்படும் பிபிஎம் ஆண்ட்ராய்டு, ஐஒஎஸ் மற்றும் பிளாக்பெர்ரி ஒஎஸ் போன்களில் கிடைக்கும். சாட்டிங் மட்டுமின்றி வீடியோ சாட்டிங், மிக சிறந்த குருப் அட்மின் போன்ற சிறப்பம்சங்களை கொண்டுள்ளது. மேலும் பயனர்கள் சாட் ஸ்டேடஸ்களை மாற்றி கொள்ளும் வசதியும் இதில் உள்ளது. செல்ப் டெஸ்ட்ரக்ட் சிஸ்டம் இதில் பயன்படுத்தப்படுகிறது.
6. டெலிகிராம்
டெலிகிராம் மெசன்ஜெரில் 1.5GB அளவுள்ள பைல்களை துரிதமாக மற்றவருக்கு அனுப்ப இயலும். ஜிஃப் பைல்களுக்கு சப்போர்ட் செய்கிறது டெலிகிராம். பல ஸ்டோர்களில் டெலிகிராம் இலவசமாக கிடைக்கிறது. மெசெஜ்களுக்கு செல்ப் டெஸ்ட்ரக்ட் சிஸ்டம் இதில் உள்ளது. 1,000 பயனர்கள் வரை இடம்பெறும் குருப்கள் இதில் பயன்படுத்தலாம் இதுவே இதன் முக்கிய அம்சம் ஆகும்.