நாட்டில், சமீப காலமாக, ‘டெபிட், கிரெடிட்’கார்டுகள் மூலம், ஏராள மான மோசடிகள்நடக்கின்றன.இதை தடுக்கும் நோக்கில், அனைத்துவங்கிகளும், தங்கள் வாடிக்கையாளர்களுக்கு, ‘சிப்’ பொருத்தப்பட்ட, புதிய, ‘டெபிட், கிரெடிட்’ கார்டுகளை வழங்கும்படி, 2015 ஆகஸ்டில், ரிசர்வ் வங்கி உத்தரவிட்டது. இதற்கான பணிகளை மேற்கொள்ள, மூன்று ஆண்டுகள் அவகாசம் அளிக்கப்பட்டது.இதையடுத்து, தங்கள் பழைய, ‘டெபிட், கிரெடிட்’ கார்டுகளுக்கு பதில், புதிய, ‘டெபிட், கிரெடிட்’ கார்டுகளை, டிச., 31க்குள் பெற்றுக் கொள்ளும்படி, வாடிக்கையாளர்களை, எஸ்.பி.ஐ., எனப்படும், பாரத ஸ்டேட் வங்கி, ஆகஸ்ட் மாதத்தில் அறிவுறுத்தியது. இதன்படி, இந்த வங்கி யின் பெரும்பாலான வாடிக்கையாளர்கள், புதிய, ‘சிப்’ பொருத்தப்பட்ட, ‘டெபிட், கிரெடிட்’ கார்டுகளை பெற்று வருகின்றனர். பிற வங்கிகளின் வாடிக்கையாளர்களும், புதிய கார்டுக்கு மாறிவருகின்றனர்.
‘சிப்’ இல்லாத, ‘டெபிட், கிரெடிட்’ கார்டுகள், 2019 ஜன., 1 முதல் செயல்படாது. எனவே, வங்கி வாடிக்கையாளர்கள், தங்களது வங்கியின் அதிகாரபூர்வ இணையதளத்தில், புதிய, ‘சிப்’ பொருத்தப்பட்ட, ‘டெபிட், கிரெடிட்’ கார்டுகள் கோரி விண்ணப்பிக்கலாம்; அல்லது சேமிப்பு கணக்கு வைத்துள்ள வங்கிக்குச் சென்று, புதிய கார்டுகளை பெற்றுக் கொள்ளலாம். புதிய, ‘சிப்’ பொருத்தப்பட்ட கார்டு, இ.எம்.வி.,எனப்படும், ‘யூரோபே, மாஸ்டர் கார்டு, விசா கார்டு’ என, அழைக்கப்படுகிறது.