சென்னை: வரவேற்பு… வரவேற்பு… தற்காலிக கணினி ஆசிரியர்களை நியமனம் செய்ய அரசு முடிவு செய்துள்ளதற்கு வரவேற்பு அளிக்கப்பட்டுள்ளது.

 

கணினி ஆசிரியர்கள் இன்றி கற்கும் அரசுப்பள்ளி மாணவர்களுக்கு தமிழக அரசு .ஆசிரியர் தேர்வு வாரியத்தின் வாயிலாக நேரடி நியமனம் மூலம் நியமிக்கும் வரை தற்காலிகமாக 816 கணினி ஆசிரியர்களை நியமனம் செய்ய உள்ளது.

 

தமிழகத்தில் மேல்நிலைப்பள்ளியில் மட்டும் தான் கணினி ஆசிரியர்கள் 1800 பணிபுரிகின்றனர். (தொடக்க, நடுநிலை, உயர்நிலைப்பள்ளிகளில் கணினி பாடமும் இல்லை ஆசிரியர்களும் இல்லை)

 

தற்காலிக PTA ஆசிரியர் நியமனத்தில் கூட கணினி ஆசிரியர்களுக்கு இடமில்லாமல் தமிழக அரசு அரசாணை வெளியீட்டு இருந்தது. 1474 தற்காலிக முதுகலை ஆசிரியர்கள் நியமனம் செய்ய முன்னர் தமிழக அரசு அரசாணை வெளியிட்டு இருந்த நிலையில் தற்போது மாநில முழுவதும் 816க்கும் மேற்ப்பட்ட கணினி ஆசிரியர்கள் பணியிடம் காலியாகவே இருந்தை தற்காலிகமாக நியமிக்க அரசு உத்தரவிடப்பட்டுள்ளது.

 

மேல்நிலை வகுப்புகளில் பிளஸ் 1, பிளஸ் 2 ஆகிய இரு வகுப்புகளுக்கும் பொதுத் தேர்வு நடைபெற்று வருகிறது. புதிய பாடத்திட்டத்தில் கணினி பாடம் பிளஸ் 1 வகுப்பிற்க்கு 3 வகையான பாடபுத்தகங்கள் வழங்கப்பட்டுள்ளது

 

1.கணினி அறிவியல்- (கணித பிரிவு ),

2.கணினி பயன்பாடு -(வரலாறு, பொருளியல், வணிகக் கணிதம்),

3.கணினியில் தகவல் தொழில்நுட்பம் -(அனைத்து வகை தொழிற்கல்வி பிரிவுகளுக்கும்).

 

இந்தப் புதிய பாடங்கள் இந்த ஆண்டு பிளஸ்1 வகுப்புக்கு நடைமுறைக்கு வந்துள்ளது. அடுத்த ஆண்டு முதல் பிளஸ்2 வகுப்புக்கும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது பிளஸ்1க்கு கடந்த ஆண்டு முதல் பொதுத்தேர்வு நடைபெற்று வருகின்றது.

 

இந்நிலையில் கடந்த ஜூன் மாதம் கணினி ஆசிரியர்கள் பணியிட மாற்றத்திற்கு பிறகு தலா 816 அரசு மேல்நிலைப்பள்ளிகளில் கணினி ஆசிரியர் காலிப்பணியிடங்கள் காலியாகவே இருந்தது இதனால் பொதுத் தேர்வை எதிர்நோக்கும் கணினி பயிலும் மாணவர்கள் ஆசிரியர்கள் இன்றி தவித்து வந்தனர்.

 

காலியாக உள்ள ஆசிரியர்கள் பணியிடங்களை மற்ற பாட ஆசிரியர்கள் போன்று பெற்றோர் ஆசிரியர் கழகத்தின் சார்பில் கணினி ஆசிரியர்கள் நியமிக்க அரசு உத்தரவிட்டுள்ளது. கணினி ஆசிரியர்களுக்கு எந்த அறிவிப்பும் இல்லாத நிலையில் தற்போது பொதுத் தேர்வை எதிர் கொள்ளும் கணினி மாணவர்கள் நலனை கருத்தில் கொண்டு நிரந்தர கணினி ஆசிரியர்கள் நியமிக்கும் வரை அரசு உடனடியாக பெற்றோர் ஆசிரியர்கள் கழகத்தின் வாயிலாக பி.எட் பயின்ற கணினி ஆசிரியர்களை நியமிக்க நியமிக்க துறை அமைச்சரிடம் கோரிக்கை வைக்கப்பட்டது.

 

இந்த கோரிக்கையை ஏற்று தற்பாேது 816 அரசுப் பள்ளியில் ஆசிரியர்கள் நியமனம் செய்ய தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதற்கு கணினி ஆசிரியர்கள் சங்கம் சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!