கொடைக்கானல் வானியியற்பியல் மைய ஆராய்ச்சியாளர், செல்வேந்திரன் கூறியதாவது: விண்வெளியில், அவ்வப்போது வால் நட்சத்திரங்கள் நகர்வு இருக்கும். தற்போது, ’46 பி’ எனும், ‘விர்ட்டியனின்’ வால் நட்சத்திரம், பூமிப்பாதையில் நகர்கிறது. நாளை, டிச., 15 முதல், 17 வரை, இந்த வால் நட்சத்திரம் பூமிப்பாதையில் வருகிறது.
வடகிழக்கு திசையில், நீல வண்ணத்தில் சுடர்விட்டு நகரும். இதை இந்தியா முழுவதும் தொலைநோக்கி இன்றி, வெறும் கண்ணாலும் காணலாம். நாளை இரவு, 9:00 மணி, நாளை மறுநாள் இரவு, 8:00 மணி, top replica watches டிச., 17ல் இரவு, 7:00 மணி முதல், இந்த வால் நட்சத்திரத்தை பார்க்கலாம். இவ்வாறு அவர் கூறினார்.