டில்லி

ந்த வருடத்துக்கான ஞானபீட விருது பிரபல ஆங்கில நாவலாசிரியர் அமிதவ் கோஷுக்கு வழங்கப்பட்டுள்ளது.

இலக்கியத்துக்கான இந்திய விருதுகளில் ஞானபீட விருது உயரிய விருது ஆகும். இந்த விருதுக்கு தேர்ந்தெடுக்கப்படுவதை மிகவும் பெருமைக்குரிய அங்கிகாரமாக எழுத்தாளர்கள் கருதி வருகின்றனர். கடந்த 53 ஆண்டுகளாக இந்த ஞான பீட விருது வழங்கப்பட்டு வருகிறது. இது 54 ஆம் ஆண்டாகும்.

இந்திய ஆங்கில எழுத்தாளர்களில் உலகப் புகழ்பெற்றவர் அமிதவ் கோஷ் ஆவார் மேற்கு வங்க தலைநகர் கொல்கத்தாவில் பிறந்த கோஷ் தில்லி ஸ்டிபன்ஸ் கல்லூரியில் கல்வி கற்றார். அதன் பிறகு ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தில் சமூக மானுடவியலில் முனைவர் பட்டம் பெற்றார். பிரபல ஆங்கில இதழ்களில் கட்டுரைகள் எழுதும் இவர் ஹாவ்ர்ட் பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக பணி புரிந்தவர் ஆவார்.

இந்த 2018ஆம் ஆண்டுக்கான ஞானபீட விருது அமிதவ் கோஷுக்கு வழங்கப்படுகிறது. இவர் ஏற்கனவே சாகித்ய அகாடமி விருதையும் பல்வேறு சர்வதேச விருதுகளையும் பெற்றவர் ஆவார். மற்றும் இந்திய அரசின் பத்மஸ்ரீ விருதையும் அமிதவ் கோஷ் பெற்றுள்ளவர் என்பது குறிப்பிடத்தக்கது.

error: Content is protected !!