கம்பம்: கூடுதல் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களை, நல்வாழ்வு மையங்கள் என பெயர் மாற்றம் செய்ய பொது சுகாதாரத்துறை முடிவு செய்துஉள்ளது.கூடுதல் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள் கிராம மக்களுக்கு மருத்துவ சேவை செய்வதில் முக்கிய பங்காற்றுகிறது. அவற்றை மேம்படுத்த தமிழக அரசு முடிவு திட்டமிட்டுள்ளது. எனவே அவற்றின் பெயரை ‘நல்வாழ்வு மையம்’ (வெல்னஸ் சென்டர்) என மாற்றம் செய்ய பொது சுகாதாரத்துறை முடிவுசெய்துள்ளது.சுகாதார நிலையங்களில் பணிபுரியும் டாக்டர்கள் கூறுகையில், ‘நல்வாழ்வு மையம் என பெயர் மாற்றம் புத்தாண்டு முதல் அமலுக்கு வரலாம் எனத்தெரிகிறது. எக்ஸ்ரே, ஆப்பரேஷன் தியேட்டர், கூடுதல் டாக்டர்கள், செவிலியர், படுக்கை, நவீன லேப் உள்ளிட்ட பல வசதிகள் செய்து தர வலியுறுத்தி உள்ளோம்,’ என்றனர்.