திருப்புவனம்: மதுரையில் இருந்து ராமேஸ்வரம் வரையிலான, 113 கி.மீ., அகல ரயில் பாதையை மின்மயமாக்க, ஆரம்ப கட்ட பணிகள் துவங்கியுள்ளன.மதுரை – ராமேஸ்வரம் ரயில் பாதையில், முதல் கட்டமாக, மானாமதுரை வரை உள்ள, 47 கி.மீ., துாரத்தை மின்மயமாக்கும் ஆய்வு பணியை துவங்கியுள்ளன.ஐதராபாத், ஆர்.வீ., அசோசியேட்ஸ் என்ற நிறுவனம், ‘ஹெலிகேம்’ மூலம், ஆய்வு பணியை மேற்கொண்டுள்ளது. ரயில் பாதையின் இருபுறமும் உள்ள மரங்கள், மின்கம்பங்கள், வீடுகள், தொழிற்சாலைகள், பாலங்கள், லெவல் கிராசிங்குகள், உயர்மட்ட பாலங்கள், மின் வழித்தடங்கள், துணை மின்நிலையங்கள், பள்ளிகள் உள்ளிட்டவை, படம் பிடிக்கப்படுகின்றன.’இந்த ஆய்வு முடிவு களை அடுத்து பணிகள் துவங்கும்’ என, அதிகாரிகள் தெரிவித்தனர்.