சென்னை, மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்திய, 2018ம் ஆண்டு சிவில் சர்வீஸ் முதன்மை தேர்வு முடிவுகள் வெளியாகி உள்ளன.சென்னை, முன்னாள் மேயர், சைதை துரைசாமிக்கு சொந்தமான, மனிதநேயம் ஐ.ஏ.எஸ்., இலவச கல்வியகம் சார்பில், 10 மாணவியர் உட்பட, 34 பேர் தேர்ச்சி பெற்றுஉள்ளனர்.முதன்மை தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ள, அனைத்து மாணவ – மாணவியருக்கும், மனிதநேய பயிற்சி மையம் சார்பில், நேர்முகத் தேர்விற்கான பயிற்சி வகுப்புகள், இலவசமாக நடத்தப்பட உள்ளன.இதில் பங்கேற்க விரும்பும், தேர்ச்சி பெற்ற மாணவ – மாணவியர், தங்களுடைய பாஸ்போர்ட் அளவு புகைப்படம், எழுத்து தேர்வுக்கான நுழைவுச்சீட்டு ஆகியவற்றுடன், இன்று முதல், நேரிலோ அல்லது, www.mntfreeias.com என்ற, இணையதளம் வழியாகவோ, பதிவு செய்து கொள்ளலாம்.அனைத்து மாணவர்களுக்கும், அனைத்து வசதிகளும் இலவசமாக செய்து தரப்படும் என, மையத்தின் பயிற்சி இயக்குனர், கார்த்திகேயன் தெரிவித்துள்ளார்.