நாகர்கோவிலில் தனியார் நிறுவனங்களின் சார்பில் வேலைவாய்ப்பு முகாம் வெள்ளிக்கிழமை (டிச. 28) நடைபெறுகிறது.
இது குறித்து, கன்னியாகுமரி மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலக உதவி இயக்குநர் மா. மல்லிகாராணி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: நாகர்கோவில் கோணத்தில் உள்ள வேலைவாய்ப்பு அலுவலகத்தில் தனியார் நிறுவனங்களின் சார்பில் வேலைவாய்ப்பு முகாம் வெள்ளிக்கிழமை காலை 10 மணிக்கு நடைபெற உள்ளது. முகாமில் குமரி மாவட்டம் மற்றும் பிற மாவட்டத்தில் தனியார் நிறுவனங்களின் பிரதிநிதிகள் பங்கேற்று, தங்களது நிறுவனங்களுக்கு தேவையான ஆள்களை தேர்வு செய்கின்றனர். இதில், 10 ஆம் வகுப்பு, பிளஸ் 2, பட்டப்படிப்பு, டிப்ளமோ, ஐடிஐ, கணினி பயிற்சி கல்வித் தகுதியுடைய பதிவுதாரர்கள் கலந்து கொள்ளலாம். தனியார் நிறுவனங்களில் பணி செய்ய தேர்வு செய்யப்படும் பதிவுதாரர்களின் வேலைவாய்ப்பு அலுவலக பதிவு எண்கள் ரத்து செய்யப்பட மாட்டாது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.