சென்னை : உதவிப்பொறியாளர் பதவிக்கான தேர்வு முடிவை, பொங்கலுக்குள் வெளியிட மின் வாரியம் திட்டமிட்டுள்ளது.
தமிழ்நாடு மின் வாரியம், 325 உதவி பொறியாளர் பதவிக்கு, ஆட்களை தேர்வு செய்ய உள்ளது. இதற்கான எழுத்து தேர்வை, அண்ணா பல்கலை, 124 தேர்வு மையங்களில், நேற்று நடத்தியது. இந்த தேர்வின் முடிவுகள், பொங்கலுக்கு வெளியிட, மின் வாரியம் திட்டமிட்டுள்ளது.மின் வாரியம், முதல் முறையாக, எழுத்து தேர்வு நடத்தி, அதன் அடிப்படையில், வேலை வழங்க உள்ளது.