தமிழக அரசுத் துறைகளில் பணியாற்றும் சி மற்றும் டி பிரிவு ஊழியர்களுக்கு பொங்கல் போனஸ் அளிக்கப்படும் என்று அரசு அறிவித்துள்ளது.
நிதித் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் க.சண்முகம் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட
உ த்தரவு: தமிழக அரசுத் துறைகளில் பணியாற்றும் சி மற்றும் டி பிரிவு அரசு ஊழியர்கள், உள்ளாட்சி மன்றப் பணியாளர்கள், அரசு மானியம் பெறும் கல்வி நிறுவனங்களில் பணிபுரியும் பணியாளர்களுக்கு பொங்கல் போனஸ் அளிக்கப்படும். 30 நாள்கள் ஊதியத்துக்கு இணையான தொகை வழங்கப்படும். கடந்த ஆண்டு வழங்கப்பட்ட ரூ.3 ஆயிரம் இந்த ஆண்டும் வழங்கப்படும். மேலும், முழு நேரம் மற்றும் பகுதி நேரப் பணியாளர்கள், தொகுப்பூதியம் பெற்று வந்த பணியாளர்கள், சத்துணவு திட்டப் பணியாளர்கள், கிராம உதவியாளர்கள், தற்காலிக உதவியாளர்கள், தினக்கூலி அடிப்படையில் பணியாற்றும் பணியாளர்கள் உள்ளிட்டோருக்கு சிறப்பு தற்காலிக மிகை ஊதியமாக ஆயிரம் ரூபாய் அளிக்கப்படும் என்றும் தமிழக அரசு அறிவித்துள்ளது.
ஓய்வூதியதாரர்கள்: இதேபோன்று, அரசுத் துறைகளில் சி மற்றும் டி பிரிவுகளில் பணியாற்றி ஓய்வு பெற்ற பணியாளர்களுக்கு பொங்கல் பரிசுத் தொகையாக ரூ.500 அளிக்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.