சென்னை, இந்திய கடலோர காவல் படை தினத்தை முன்னிட்டு, ரோந்து கப்பலில், பள்ளி மாணவர்களுக்கு வினாடி – வினா போட்டி நடத்தப்பட்டது.இந்திய கடலோர காவல் படை தினம், பிப்., 1ல் கொண்டாடப்படுகிறது. இதை முன்னிட்டு, பள்ளி மாணவர்களுக்கு, வினாடி – வினா போட்டி, நேற்று நடத்தப்பட்டது.இதுகுறித்து, கடலோர காவல் படை செய்திக்குறிப்பு:கடலோர காவல் படையின், 42வது தினத்தை முன்னிட்டு, ஒன்பது முதல், 12ம் வகுப்பு வரையான மாணவர்களுக்கு, வினாடி – வினா போட்டி நடத்தப்பட்டது. இந்த போட்டி, கடலோர காவல் படையின் கிழக்கு பிராந்தியத்துக்கு சொந்தமான, ‘சாஹர்’ என்ற, ரோந்து கப்பலில் நடந்தது. இதில், சென்னையில் இருந்து, 22 பள்ளிகளை சேர்ந்த மாணவர்கள் பங்கேற்றனர்.இதில், ஆவடி, கேந்திரிய வித்யாலயா பள்ளி, முதல் பரிசையும், ஸ்ரீ சங்கரா உயர்நிலை பள்ளி, இரண்டாவது பரிசையும், பால வித்யாமந்திர், மூன்றாவது பரிசையும் பெற்றன. இவர்களுக்கு, கடலோர காவல் படையின் கிழக்கு பிராந்திய ஐ.ஜி., எஸ்.பரமேஷ் மற்றும் கலாக்ஷேத்ரா அறக்கட்டளை இயக்குனர், ரேவதி, பரிசுகளை வழங்கினர்.