தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் மற்றும் ரயில்வே தேர்வு வாரியத்தின் சார்பில் நடைபெற உள்ள போட்டித் தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி நாகர்கோவிலில் நடைபெறுகிறது.
இதுகுறித்து குமரி மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலக உதவி இயக்குநர் மூ. காளிமுத்து வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் அறிவிக்கப்பட்டுள்ள கோயில் நிர்வாக அலுவலர், மாவட்ட கல்வி அலுவலர் பணிக் காலியிடங்களுக்கான போட்டித் தேர்வுகளுக்கான இலவச பயிற்சி வகுப்புகள், தொகுதி 2 மற்றும் தொகுதி 4 பணிக் காலியிடங்களுக்கான போட்டித் தேர்வுகள் மற்றும் ரயில்வே தேர்வு வாரியத்தால் அறிவிக்கப்பட்டுள்ள உதவிப் பொறியாளர் பணிக் காலியிடங்களுக்கான இலவச பயிற்சி வகுப்புகளும் ஜன. 22 ஆம் தேதி முதல் கோணத்தில் உள்ள மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் சிறந்த பயிற்றுநர்களைக் கொண்டு நடத்தப்பட்டு வருகிறது. இலவசப் பயிற்சி, அலுவலக வேலைநாள்களில் காலை 10 மணிமுதல் மாலை 5 மணிவரை நடத்தப்படுகிறது.
இந்தப் போட்டித் தேர்வுகளுக்கு தயார்செய்யும் பொருட்டு, மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம், கோணம், நாகர்கோவிலில் நடைபெறும் பயிற்சி வகுப்பில் பங்கேற்க விருப்பமுள்ளவர்கள் வேலைவாய்ப்பு அடையாளஅட்டை, சாதிச் சான்றிதழ், ஆதார்கார்டு, போட்டித் தேர்வுக்கு விண்ணப்பித்ததின் நகல் மற்றும் பாஸ்போர்ட் சைஸ் போட்டோ ஆகியவற்றுடன் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தை தொடர்புகொள்ளலாம்.