தமிழ் வளர்ச்சி துறையின் கீழ் உள்ள, தமிழ் வளர்ச்சி இயக்ககம் சார்பில், ஆண்டு தோறும், தமிழ் அறிஞர்களுக்கு, தமிழ் புத்தாண்டை ஒட்டி விருதுகள் வழங்கப்படுகின்றன. 2018 தமிழ் புத்தாண்டுக்கான விருதுகளை, முதல்வர், இ.பி.எஸ்., 19ம் தேதி வழங்குகிறார்.தமிழ் மொழி, பண்பாட்டு வளர்ச்சிக்கு பாடுபடும் தமிழறிஞர்கள், கவிஞர்கள், சமூக நீதி போராளிகளுக்கு, இந்த விருதுகள் வழங்கப்படுகின்றன. மாவட்டத்திற்கு ஒருவர் வீதம், 32 தமிழறிஞர்களுக்கு, தமிழ் செம்மல் விருதுகள் வழங்கப்படும்.மேலும், கபிலன் விருது, உ.வே.சா., விருது, கம்பர் விருது, சொல்லின் செல்வர் விருது என, மொத்தம், 56 பேருக்கு விருதுகள் வழங்கப்படுகின்றன.