கொடைக்கானல்:திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் டி.ஜி.பி.எஸ்., (புவியிடம் காட்டி) எனும் நவீன தொழில் நுட்ப நில அளவை கருவி அமைக்கப்பட்டுள்ளது.
செயற்கைகோள் உதவியுடன் செயல்படும் இக்கருவி தமிழகத்தில் 200 இடங்களில் உள்ளன. இதன்மூலம் நில அளவையில் துல்லியமான முடிவு கிடைக்கும். தினமும் 20 ஏக்கரை அளவீடு செய்து வரைபடம் தயாரிக்க முடியும். கிருஷ்ணகிரி, ஊட்டி, வேலுார், கன்னியாகுமாரி மாவட்டங்களில் இது பயன்படுத்தப்பட்டுள்ளது.
கடந்த மாதம் திண்டுக்கல் மாவட்டம் தாண்டிக்குடி ஏலக்காய் ஆராய்ச்சி நிலைய நில அள வீட்டிற்கு பயன்படுத்தினர். தற்போது கொடைக்கானல் நில அளவை மைய கட்டட வளாகத்தில் இக்கருவி பொருத்தப்பட்டுள்ளது.இத்தொழில்நுட்பத்தை அனைத்து மாவட்டங் களிலும் விரிவுப் படுத்தி நில அளவை பணிகளை நவீனபடுத்த அரசு திட்டமிட்டுள்ளது. இதற்காக ஊழியர்களுக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது.
நில அளவைத்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், ”இக்கருவி பயன்பாட்டிற்கு வர மேலும் சில தொழில்நுட்பங்கள் தேவை. இதன்மூலம் சங்கிலி, டேப் கொண்டு அளவீடு செய்வது தவிர்க்கப் படும். கொடைக்கானல் தாலுகாவில் ‘சர்வே’ பணிகளை நவீன தொழில்நுட்பம் மூலம் முடிக்க முடியும்’ என்றார்.