குமரி மாவட்டத்தில் 4 ஜி இணைப்புகள் வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது என்றார் பிஎஸ்என்எல் மாவட்ட பொது மேலாளர் சஜிகுமார். அருமனையில், பிஎஸ்என்எல் அதிவேக கண்ணாடி இழை இணைய சேவை வழங்கும் நிகழ்ச்சியில் பங்கேற்ற அவர் பேசியது: குமரி மாவட்டத்தில் அனைத்து வீடுகளையும்,
தக்கலையில் கொடிநாளை முன்னிட்டு மாணவர், மாணவிகளின் பேரணி வெள்ளிக்கிழமை நடைபெற்றது. கல்குளம் வட்டாட்சியர் அலுவலகம் சார்பாக நடைபெற்ற இப் பேரணியை பத்மநாபபுரம் சார் ஆட்சியர் ராஜகோபால் சுங்காரா கொடியசைத்து தொடங்கிவைத்தார். இந்த பேரணியானது மேட்டுக்கடை, காமராஜர் பேருந்து நிலையம், பழைய பேருந்து
மாற்றுத்திறனாளிகள் தயாரிக்கும் பொருள்களை பொதுமக்கள் வாங்கி அவர்களுக்கு உதவ வேண்டும் என்றார் குமரி மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் மு.வடநேரே. மாற்றுத்திறனாளிகள் தின விழாவையொட்டி, நாகர்கோவில் எஸ்.எல்.பி. அரசு உயர்நிலைப்பள்ளியில், மாற்றுத்திறனாளிகள் பொருள்கள் தயாரிப்பு மற்றும் தொழில் தொடங்குவதற்கான திட்ட விழிப்புணர்வு கண்காட்சியினை
கன்னியாகுமரியில் ரோப்கார் திட்டத்தை செயல்படுத்தும் வகையில், திருநெல்வேலியைச் சேர்ந்த தனியார் நிறுவன அதிகாரிகள் முக்கடல் சங்கமம் பகுதியில் வெள்ளிக்கிழமை ஆய்வு மேற்கொண்டனர். சர்வதேச சுற்றுலாத் தலமான கன்னியாகுமரிக்கு ஆண்டுக்கு 70 லட்சத்துக்கும் அதிகமான சுற்றுலாப் பயணிகள் வந்து செல்வதாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.
செய்யாறு: செய்யாறு அருகே பள்ளி பரிமாற்ற திட்டத்தையொட்டி, மாணவர்களுக்கு மேளதாளத்துடன் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. தமிழக பள்ளிக்கல்வித்துறை சார்பில் கிராமப்புற மற்றும் நகர்ப்புற மாணவர்களை ஒருங்கிணைக்கும் வகையில் பள்ளி பரிமாற்ற திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தில், பல்வேறு சூழல்களுக்கு இடையே பயிலும்
திருவண்ணாமலை: திருவண்ணாமலை அருகே விவசாய நிலத்தில் புதைந்து கிடந்த 15ம் நூற்றாண்டைச் சேர்ந்த விஜயநகர பேரரசு காலத்தின் வீரக்கல் கண்டெடுக்கப்பட்டது. திருவண்ணாமலை பகுதியில், ஏராளமான வரலாற்று ஆவணங்கள், கல்வெட்டுகள், வீர நடுகற்கள் போன்றவை சமீபகாலமாக கண்டெடுக்கப்பட்டு வருகின்றன. அதன்படி, திருவண்ணாமலை அடுத்த
மதுரை: 2017-ம் ஆண்டு 632 உடற்கல்வி ஆசிரியர்கள் தேர்வு செய்யப்பட்டதை ஐகோர்ட் மதுரை கிளை ரத்து செய்து செய்து உத்தரவிட்டுள்ளது. தேர்வுக்கான அரசின் அறிவிப்பாணை முறையாக இல்லை என்று நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது. நெல்லையை சேர்ந்த எஸ்.மலர்விழி உள்பட 15
திருச்சி: டிசம்பர் 12-ம் தேதி திருச்சி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர் ஆலய கும்பாபிஷேக விழா டிசம்பர் 12-ம் தேதி நடைபெற உள்ளது. இதனால் உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.