நாமக்கல் மாவட்டம் லத்துவாடியில் உள்ள நம்பிக்கை இல்லத்தில், பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. அதில் சென்னை அறிவியல் நகர துணைத் தலைவர் சகாயம் ஐ.ஏ.எஸ் பங்கேற்றார்.
அப்போது பேசிய அவர், “கிராமங்களின் தேசமான இந்தியாவில் விவசாயத்தின் மீது தொடர்ந்து நெருக்கடி ஏற்பட்டு வருகிறது. இருபது வருடங்களுக்கு மேலாக விவசாயிகளின் இப்பிரச்னையை கண்டு கொள்ள வேண்டும். இங்கிருக்கும் எல்லோரும் விவசாயத்தை பின்புலமாக கொண்டவர்கள்..
விவசாயிகளுக்கு நம்முடைய ஆதரவு தேவை. இப்போது இருக்கும் இந்தியா இரண்டாக பிளவுபட்டிருக்கிறது. ஒன்று நகர இந்தியா, மற்றொன்று கிராம இந்தியா. இது படித்த இந்தியா, படிக்காத இந்தியா, ஆங்கிலம் தெரிந்த இந்தியா, ஆங்கிலம் தெரியாத இந்தியா என தற்போதைய சூழலில் அமைந்து வருகிறது.
நமது முன்னோர்களான காந்தி முதல் நேதாஜி வரை அனைவரும் செய்த தியாகங்களை நினைவு கூற வேண்டும். திருப்பூர் குமரனின் தடியடி சாவு, பகத்சிங்கின் தூக்கு கயிறு, காந்தியின் சிறைவாசம் மற்றும் உண்ணாவிரதப் போராட்டம், நேதாஜியின் போர்க்கள போராட்டம், அம்பேத்கரின் அறவழி போராட்டம் எல்லாம், ஏழைகளின் முன்னேறுவதற்காகவே. அவை செல்வந்தர்களுக்காக அல்ல.
இன்றைய இளைஞர்கள் சினிமா மோகத்தால் சீரழிகிறார்கள் என்று கூறுவது தவறு. 50 ஆண்டுகளுக்கு முன்னால் இருந்த தமிழ்ச் சமூகம் சினிமாவில் முற்றிலும் ஊறிப்போயிருந்தது. ஆனால் தற்போதைய இளைஞர்கள் தெளிவாக இருக்கிறார்கள் என்பதுதான் உண்மை.
கிராமப்புற விஞ்ஞானிகள், இருவர் தேர்வு செய்யப்பட்டு, தலா ஒரு லட்சம் ரூபாய் வழங்கப்படும். அரசு பள்ளியில், அறிவியல் ஆசிரியர்கள், சிறந்த அறிவியல் ஆசிரியர் விருது, ஒவ்வொருவருக்கும் 25 ஆயிரம் ரூபாய் என 10 பேர் தேர்வு செய்யப்பட்டு வழங்க அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதேபோல், அரசு பள்ளியில், அறிவியல் அறிஞர்களை உருவாக்கும் திட்டத்தை, அரசுக்கு அளிக்க இருக்கிறோம். ஊழலை எதிர்ப்பது என்பது, ஒவ்வொரு குடிமகனின் கடமை.
பிரச்னை என்னவென்றால், ஊழல் அதிகம் இருப்பதால், அதை எதிர்ப்பவர்கள் எல்லாம் சரி இல்லாதவர்கள் போல் ஒரு தோற்றம் ஏற்படுகிறது. அரசியலமைப்பு சட்டத்தின் மீது அளப்பறிய நம்பிக்கை கொண்டிருப்பவர்கள், நாட்டை அளவுக்கு அதிகமாக நேசிப்பவர்கள் செய்ய வேண்டிய முதல் கடமை, ஊழலை வேரறுக்க வேண்டும். வருங்காலத்தில், ஊழலுக்கு எதிராக ஒத்த கருத்துடைய இயங்கங்களுடன் ஒன்றிணைந்து செயல்படுவோம்”; என்று கூறினா