ஆஸ்திரேலிய மண்ணில் வரலாற்று பெற்றி பெற வேண்டும் என்பதற்காக எங்களின் தயாரிப்பு, ஆயத்தம் அனைத்தும் 12 மாதங்களுக்கு முன் தென் ஆப்பிரிக்கத் தொடரிலேயே தொடங்கிவிட்டது என்று இந்திய அணியின் ரவி சாஸ்திரி விளக்கம் அளித்தார்.
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை இந்திய அணி 2-1 என்ற கணக்கில் கைப்பற்றி சரித்திர வெற்றி படைத்துள்ளது. 72 ஆண்டுகளில் முதல் முறையாக ஆஸ்திரேலிய மண்ணில் டெஸ்ட் தொடரை வென்ற முதல் ஆசிய அணி என்ற பெருமையும் இந்திய அணிக்குக் கிடைத்துள்ளது.
அப்போது ரவி சாஸ்திரி கூறியதாவது:
”எந்த வெற்றி எனக்கு எவ்வாறு மனநிறைவு தருகிறது என்று கூறுகிறேன். கடந்த 1983-ம் ஆண்டு உலகக்கோப்பை, 1985-ம் ஆண்டு சாம்பியன்ஷிப் எனக்குப் பெரிதாக இல்லாமல் இருந்திருந்தால், இந்த வெற்றிதான் மிகப்பெரியதாக அமைந்திருக்கும். ஏனென்றால், கிரிக்கெட்டின் உண்மையான வடிவமான டெஸ்ட் போட்டியில் கிடைத்த வெற்றி இது. டெஸ்ட் கிரிக்கெட் என்றாலே கடினமானதுதான்.