ஈரோடு மாவட்டம், கோபிசெட்டிபாளையத்தில் புதிதாக அமைக்கப்படவுள்ள வேளாண்மை விற்பனை வணிக வளாகத்துக்கான கட்டடப் பணியை வெள்ளிக்கிழமை தொடங்கிவைத்து செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:
பள்ளிக் கல்வித் துறையில் புதிய மாற்றத்தைக் கொண்டு வர அயல்நாட்டு நிறுவனங்களுடன் ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதில் ரூ. 2500 கோடி மதிப்பீட்டில் 35 ஆயிரம் பள்ளிகளில் புதிய தொழில்நுட்பங்கள் உள்பட அனைத்து விதமான தொழில்நுட்பங்களையும் மாணவர்கள் கற்றுக் கொள்வதற்காக ஆய்வகங்கள் அமைக்கப்படவுள்ளன. இந்தப் பணிகள் அடுத்த 25 மாதங்களுக்குள் நிறைவடையும்.
கற்றல் குறைபாடு உள்ள குழந்தைகளின் திறனை வளர்க்க ரோபோ மூலம் பாடம் கற்பிக்கும் முறையைப் பள்ளிகளில் கொண்டு வர பணிகள் துவங்கப்பட்டுள்ளன. தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சிறப்பாக உள்ளதால்தான் ரூ. 3 லட்சத்து 431 கோடி மதிப்பீட்டில் தொழில் தொடங்குவதற்காக முதலீட்டாளர்கள் முன்வந்துள்ளனர் என்றார்.