கர்நாடக மாநிலத்தில் ஏற்கனவே 1-ம் வகுப்பு முதல் 10-ம் வகுப்பு வரை பெண் குழந்தைகளுக்கு இலவச கல்வியினை அரசு வழங்கி வருகிறது. இந்நிலையில் கல்லூரி படிப்பு வரை பெண் குழந்தைகளுக்கு இலவச கல்வி வழங்கும் திட்டத்திற்கு மந்திரிசபை கூட்டத்தில் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் உள்ள பல கிராமங்களில் பெண்களுக்கான கல்வி மறுக்கப்பட்டு வரும் நிலையில் கர்நாடக முதலமைச்சரின் இந்த அதிரடியான அறிவிப்பு பலரது வரவேற்பைப் பெற்றுள்ளது.
கர்நாடகத்தில் கல்லூரி படிப்பு வரை பெண் குழந்தைகளுக்கு இலவச கல்வி வழங்க மந்திரி சபை கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது. அதாவது பி.யூ. கல்லூரி, முதல் நிலை கல்லூரி மற்றும் உயர்கல்வி படிப்புகளில் சேர்ந்துள்ள மாணவிகளின் கல்வி கட்டணத்தை அரசே ஏற்றுக் கொள்ளும்.
இந்தத் திட்டமானது நடப்பு கல்வி ஆண்டு (2017-18) முதல் அமலுக்கு வருகிறது. இதற்காக ஆண்டுக்கு ரூ.95 கோடி செலவாகும். இதன் மூலம் மாநிலத்தில் 3.70 லட்சம் பேர் பயன் பெறுவார்கள்.
திட்டத்தின் சிறப்புகள்
இந்தத் திட்டமானது பெங்களூரில் நடைபெற்ற மந்திரி சபைக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டது.
இந்தக் கல்வியாண்டு முதல் இந்தத் திட்டம் நடைமுறைக்கு வரும்.
இந்தத் திட்டத்தின் மூலம் வருடத்திற்கு ரூ. 95 கோடி அரசுக்குச் செலவாகும்.
(News from www.dailynewshunt.com)