சென்னை: இளைஞர்களுக்கான, தேசிய கேலோ இந்தியா விளையாட்டு போட்டியில் ஒட்டுமொத்தமாக, தமிழகம் ஐந்தாம் இடத்தைப் பிடித்தது.மஹாராஷ்டிர மாநிலம், புனேவில், தேசிய அளவில், இளைஞர்களுக்கான கேலோ இந்தியா விளையாட்டு போட்டிகள், சமீபத்தில் நடந்தன. இதில், தமிழகம், கேரளா, ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்களைச் சேர்ந்த விளையாட்டு வீரர்கள், 10 ஆயிரம் பேர் பங்கேற்றனர்.பல்வேறு வகையான போட்டிகளில், மொத்தம், 228 பதக்கங்களை வென்று, மஹராஷ்டிரா அணி முதலிடம் பிடித்து, ஒட்டுமொத்த சாம்பியன் பட்டத்தை வென்றது. 178 பதக்கங்கள் வென்று, ஹரியானா இரண்டாம் இடமும், 136 பதக்கங்களுடன், டில்லி மூன்றாம் இடத்தையும் கைப்பற்றின.இதில், 27 தங்கம், 35 வெள்ளி மற்றும் 25 வெண்கல பதக்கங்களை வென்று, தமிழகம், ஐந்தாவது இடத்தைப் பிடித்தது. கடந்தாண்டு நடந்த போட்டியில், தமிழகம் ஒன்பதாவது இடத்தைப் பிடித்திருந்தது.