மாணவர்களின் வசதிக்காக, 2019ம் ஆண்டு முதல் நீட் தேர்வை பிற்பகலில் நடத்த தேசிய தேர்வு முகமை முடிவு செய்துள்ளது.
தொலைதூரத்தில் இருந்து வரும் மாணவர்களின் வசதிக்காக, இதுவரை காலை 10 மணியளவில் நடைபெற்று வந்த நீட் தேர்வை இனி பிற்பகல் 2.30 மணி முதல் 6 மணி வரை நடத்த தேசிய தேர்வு முகமை முடிவு செய்துள்ளதாகத் தெரிய வந்துள்ளது.
நாடு முழுவதும் நீட் தேர்வு வரும் 2019ம் ஆண்டு மே மாதம் 15ம் தேதி நடைபெற உள்ளது. இந்த தேர்வுக்காக சுமார் 15 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் விண்ணப்பித்துள்ளனர். இந்த தேர்வு மட்டும் எழுதும் முறையில் நடத்தப்படும். ஆனால் அடுத்த ஆண்டு முதல் நிச்சயம் இது ஆன்லைன் மூலமாகவே நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
2019ம் ஆண்டு மே மாதம் 15ம் தேதி நடைபெறும் தேர்வுக்கு விண்ணப்பித்திருக்கும் மாணவ, மாணவிகள் ஏப்ரல் 15ம் தேதி முதல் தங்களது நுழைவுச் சீட்டை ஆன்லைன் மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது