குறிப்பாக சொத்துப் பதிவு கட்டணத்தை ஆன்லைனில் பதிவு செய்யும் சேவையைத் தொடங்கி வைத்த முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி ஆன்லைன் மட்டும் இல்லாமல் டெபிட் அல்லது கிரெடிட் கார்டுகளைப் பயன்படுத்தியும் சொத்துப் பதிவு கட்டணத்தைச் செலுத்தலாம் என்று தெரிவித்தார்.
ஆன்லைன்சொத்துப் பதிவு செய்ய ஆன்லைன் கட்டண சேவையை அறிமுகம் செய்திருப்பது வெளிப்படைத்தன்மையாக இருக்கும்
என்று அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
வீட்டில் இருந்த படியேமேலும் வீட்டில் இருந்த படியே சொத்துப் பதிவு செய்ய விண்ணப்பித்து அதற்கான கட்டணத்தை செலுத்தி தாசில்தார் கையெழுத்து மற்றும் ஞசு குறியீட்டுடன் வில்லங்கம் சான்றிதழையும் பதிவிறக்கம் செய்யக்கூடிய சேவையாகவும் இது உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
ஸ்கேன்பின்பு வில்லங்கம் சான்றிதழில் வழங்கப்படும் க்யுஆர் குறியீட்டை ஸ்கேன் செய்வதன் மூலம் பத்திர நகலைப் படிக்க கூடிய சேவையும் வழங்கப்படுகிறது. இந்தப் புதிய வசதி மூலம், விண்ணப்பதாரர் / பொதுமக்கள் வில்லங்க சான்றிதழ் மற்றும் பிற தொடர்புடைய ஆவணங்கள் பெற பதிவாளர் அலுவலகத்தை அணுக வேண்டும்.
இணையதள வங்கி சேவை,டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு மற்றும் 58 வங்கிகளுடன் இணைக்கப்பட்டுள்ள யூபிஐ சேவை மூலமாகவும் பதிவு கட்டணத்தைச் செலுத்த முடியும். பின்பு சொத்த பதிவு முடிந்த உடன் பாண்டு பத்திரம் ஸ்கேன் செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது, பின்பு இந்தச் சேவையை தொடங்கி வைத்த முதல்வர் முதல் பயனாளிக்கான
ஆவனத்தையும் வழங்கினார்.
பதிவு சான்றிதழ்இந்தச் சேவையில் தாமதம் ஏதாவது ஏற்பட்டால் அசல் நகல் சொத்தின் உரிமையாளருக்கு ஸ்கேன் செய்யப்பட்டும், மின்னஞ்சல் மூலமாகவும் அனுப்பப்படும். சொத்துப் பதிவு மட்டும் இல்லாமல் திருமணப் பதிவு சான்றிதழ்,பிறப்புச் சான்றிதழ் போன்றவற்றையும் ஆன்லைன் மூலம் கட்டணம் செலுத்திப் பெறக் கூடிய மென்பொருளும் உருவாக்கப்பட்டுள்ளது. இந்தச் சேவையையும் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தொடக்கி வைத்துள்ளார் எனபது குறிப்பிடத்தக்கது.