பள்ளிக்கான நேரத்தில் 50 விழுக்காட்டை வகுப்பறைக்கு வெளியே மாணவர்கள் செலவிட வேண்டும் என்று குடியரசு துணைத் தலைவர் வெங்கையா நாயுடு தெரிவித்துள்ளார்.
ஐதராபாத்தில் உள்ள அரசுப் பள்ளி ஒன்றின் ஆண்டு விழாவில் அவர் கலந்து கொண்டார். அப்போது மாணவர்கள் மத்தியில் பேசிய வெங்கையா நாயுடு, படிப்புக்கு எவ்வளவு முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறதோ, அதேபோல் விளையாட்டு, நடனம், கலாச்சாரம், இசை ஆகியவற்றுக்கும் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்று குறிப்பிட்டார்.
ஆசிரியர்களும், பெற்றோர்களும், பிள்ளைகளின் விளையாட்டு கல்விக்கு அதிக ஊக்கம் அளிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். பள்ளிக் கல்வி முறையை மாணவர்களுக்கு பிடித்தவாறு மாற்றி அமைக்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்