சென்னை: நாடு முழுவதும் நடைபெறும் அனைத்து அரசு ஊழியர்கள் வேலைநிறுத்த போராட்டத்தில் ஆசிரியர்கள் பங்கேற்காமல் மாணவர்களின் எதிர்காலத்தை மனதில் கொண்டு பள்ளிக்கு பணிக்கு வர வேண்டும் என அமைச்சர் செங்கோட்டையன் கேட்டுக் கொண்டுள்ளார்.
தொழிலாளர்களின் கொள்கைகளுக்கு எதிராக செயல்படும் மத்திய அரசைக் கண்டித்து, சிஐடியு, ஏஐடியுசி, ஐஎன்டியுசி, ஹெச்எம்எஸ், எல்பிஎஃப் உள்ளிட்ட 10 மத்திய தொழிற்சங்கங்கள், மத்திய, மாநில அரசு, வங்கி, காப்பீடு, பிஎஸ்என்எல், அஞ்சல், துறைமுகம், போக்குவரத்து, மின்சாரம், மருந்து விற்பனை உள்ளிட்ட பல்வேறு துறைகளில் பணிபுரியும் லட்சக்கணக்கான தொழிலாளர்களை உள்ளடக்கிய 70 அகில இந்திய சம்மேளனங்கள் இணைந்து இன்று செவ்வாய்க்கிழமை, புதன்கிழமை (ஜனவரி 8, 9) ஆகிய இரு தினங்கள் அகில இந்திய பொது வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்த வேலைநிறுத்தத்தில் 10 கோடி தொழிலாளர்கள் பங்கேற்றுள்ளனர்.