சென்னை: ஜி.பி.எஸ்., வசதி உள்ள, ‘கார்மின் இன்ஸ்டிங்க்ட்’ என்ற ஸ்மார்ட் வாட்சை அறிமுகப்படுத்தி உள்ளது, கார்மின் நிறுவனம். சாகசக்காரர்களின் வாட்ச் இது. காடு, மலை என, எங்கேயாவது சிக்கிக் கொண்டால், அவர்களை, ஜி.பி.எஸ்., மூலம் டிராக் செய்து மீட்பது எளிது. வாட்சிலிருந்து, எஸ்.ஓ.எஸ்., எனும் அவசர அழைப்பையும் செய்யலாம். குறுஞ்செய்திகளையும் அனுப்பலாம்.
* மன அழுத்தத்தை கண்காணிக்கும்
* இதயத் துடிப்பை கண்காணிக்கும். தண்ணீர், துாசி புகாது