குமரி அறிவியல் பேரவையின் இளம் விஞ்ஞானி மாணவர்களுக்கான பயிலரங்கம் ஆலஞ்சோலையில் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
ஆலஞ்சோலை டி.எம். கான்வென்ட்டில் நடைபெற்ற இந் நிகழ்ச்சிக்கு அருள்சகோதரி மரியட்டா தலைமை வகித்தார். ஜேஸா முன்னிலை வகித்தார். குமரி அறிவியல் பேரவை அமைப்பாளர் முள்ளஞ்சேரி மு. வேலையன் அறிமுகவுரையாற்றினார்.
வேளாண் விஞ்ஞானி பி. சாம்ராஜ் நிகழ்ச்சியை தொடங்கிவைத்துப் பேசினார். தக்கலை அரசு மருத்துவமனை யோகா மற்றும் இயற்கை மருத்துவப் பிரிவு மருத்துவர் சுஜின் ஹெர்பர்ட் மற்றும் கல்வியாளர்கள் ஜான்ரபிகுமார், ஜான்சன், பாலகிருஷ்ணன், மாவட்ட வேலைவாய்ப்பு முன்னாள் அலுவலர் திருவேங்கடம் ஆகியோர் கலந்து கொண்டனர். இளம் விஞ்ஞானி மாணவி ஷாலுகா நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார்.