அருமனை அருகே முக்கூட்டுக்கல் கிராமத்தில் சென்னை  லயோலா கல்லூரி மாணவர்கள் பங்கேற்ற கிராம அனுபவ முகாம் 10 தினங்கள் நடைபெற்றது.
கல்லூரியின் சமூகப்பணி முதுகலை முதலாமாண்டு மாணவர்கள் பங்கேற்ற இந்த முகாமில், திருக்குடும்ப ஆலயத்திற்கு உள்பட்ட ஒன்பது உறவியங்களில் மக்கள் பங்கேற்புத் திட்டமிடல் உத்திகளை பயன்படுத்தித் திட்டம் தயாரிக்கப்பட்டது.
பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கான எய்ட்ஸ் விழிப்புணர்வு பேரணி முக்கூட்டுக்கல்லில் இருந்து புறப்பட்டு முக்கிய சாலை வழியாக மஞ்சாலுமூடு வரை நடைபெற்றது.
உலக ஊனமுற்றோர் தினத்தையொட்டி பெருஞ்சிலம்பு இறை பராமரிப்பு இல்லத்தில் மாற்றுத் திறனாளிகளுக்கான விழிப்புணர்வு கருத்தரங்கம் நடைபெற்றது. இதைத்தொடர்ந்து, புவி வெப்பமடைந்து வருவதை தடுக்கவும், சுற்றுச் சூழலை கருத்தில் கொண்டும் தென்னை, தேக்கு, மா, பலா, நெல்லி, முருங்கை போன்ற மரக்கன்றுகள் நடப்பட்டன.
முகாம் நிறைவு விழாவுக்கு, தக்கலை மறைமாவட்ட பரிபாலகர் அருட்தந்தை சத்தியநேசன் தலைமை வகித்தார். முக்கூட்டுக்கல் திருக்குடும்ப ஆலய பங்குத்தந்தை  ஜோஸ் வயலின் முன்னிலை வகித்தார். வின்சென்ட் டி பால்சபைத் தலைவர் ஜார்ஜ் வின்சென்ட், பேராசிரியர்கள் ஜான் ஜெயக்குமார், நிரஞ்சனா  உள்ளிட்டோர் பங்கேற்றுப் பேசினர்.
மாணவர்கள் தீபக்,  புனிதா,  பெனிட்டா ஆகியோர் அறிக்கை சமர்ப்பித்தனர்.  மாணவர், மாணவியரின் விழிப்புணர்வு கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. நிகழ்ச்சியினை, மாணவர்கள் சத்தியசீலன்,  சோபியா ஆகியோர் தொகுத்து வழங்கினர். மாணவர் சாலமன் நன்றி கூறினார்.

error: Content is protected !!