ஆசிரியர் பயிற்றுனர்களுக்கு, பொது இடமாறுதல் கவுன்சிலிங் நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது.பள்ளி கல்வித்துறையில், அனைவருக்கும் கல்வி இயக்ககமான, எஸ்.எஸ்.ஏ., திட்டத்தில் பணியாற்றும், ஆசிரியர் பயிற்றுனர்கள், 3,890 பேருக்கு, மாவட்ட அளவில் பணி நிரவல் அடிப்படையில், இடமாறுதல் கவுன்சிலிங் நடத்தப்பட உள்ளது. இதற்கான உத்தரவை, பள்ளி கல்வித்துறை முதன்மை செயலர், பிரதீப் யாதவ் பிறப்பித்துஉள்ளார்.
மேலும், ஆசிரியர் பயிற்றுனர்கள் பணியில், 697 காலியிடங்களை, அனைத்து மாவட்டங்களுக்கான சராசரி காலி இடமாக மாற்றி, இடமாறுதல் கவுன்சிலிங்கை நடத்தவும், அவர் உத்தரவிட்டுள்ளார்.