சென்னை: இக்னோ மண்டல இயக்குனர், கிஷோர் வெளியிட்ட செய்திக் குறிப்பு:இக்னோவில் காலண்டர் ஆண்டுக்கான மாணவர் சேர்க்கை நடந்து வருகிறது. இதில், எம்.பி.ஏ., படிப்புக்கு நுழைவு தேர்வு இல்லாமல் மாணவர்கள் சேரலாம். அதற்கு நிதி நிறுவனங்கள், வங்கிகள் போன்றவற்றில், இரண்டு ஆண்டுகள் பணியாற்றிய அனுபவம் வேண்டும்.மற்ற இளநிலை, முதுநிலை பட்ட படிப்புகள், டிப்ளமா மற்றும் சான்றிதழ் படிப்புகளுக்கும், மாணவர் சேர்க்கை நடந்து வருகிறது. 15ம் தேதி வரை ஆன்லைன் வழியிலும், நேரிலும் விண்ணப்பிக்கலாம்.கூடுதல் விபரங்களை, 044 — 2661 8438, 2661 8039 ஆகிய தொலைபேசி எண்கள், https://onlineadmission.ignou.ac.inஎன்ற, இணையதளம் வாயிலாக தெரிந்து கொள்ளலாம்.

error: Content is protected !!