• நமது பாரம்பரியத்தை போற்றும் விதமாகவும் நினைவூட்டும் விதமாகவும், சர்வதேச வேட்டி தினம் இன்று கொண்டாடப்படுகிறது.

     

    தமிழகத்தைப் பொறுத்தவரை சாதி, மதங்களைக் கடந்து அனைத்து சமுதாயத்தினரும் விசேஷ நாட்களில் அணிய விரும்புவது வேட்டியைத்தான். ஆண்களின் கம்பீரத்திற்கு அடையாளமாகவும், நமது கலாச்சாரத்திற்கு எடுத்துக்காட்டாகவும் திகழ்வது வேட்டி என்று சொன்னால் அதனை மறுப்பவர் யாருமில்லை.

     

    நமது தட்ப வெப்ப நிலைக்கு 100 சதவிகிதம் பொறுத்தமானதும் வேட்டிதான். அணிவதற்கு ஏதுவாக ரெடிமேட் வேட்டிகள், நறுமனம் கமழும் வேட்டிகள், மேட்சிங் சட்டைகளுடன் வரும் மிக்ஸ் மேட்ச் வேட்டிகள் என, நவீன ஆடைகளுக்கு இணையாக வேட்டி தயாரிப்பாளர்களும் புதுப்புது யுக்திகளைக் கையாண்டு வருகின்றனர்.

     

    மேற்கத்திய கலாச்சாரத்தால் ஈர்க்கப்பட்ட வெகு சிலர் வேண்டுமானால் வேட்டியை மறந்திருக்கலாம். ஆனால், அலுவலகச் சூழலுக்கும், பள்ளி, கல்லூரிகளின் விதிமுறைகளுக்கும் கட்டுப்பட்டு வேட்டி அணிவதில்லை என்றே பலர் கூறுகின்றனர்.

     

    கால ஓட்டத்திற்கு ஏற்ப தேவைகளும், தேவைக்கு ஏற்ப கலாச்சாரமும் மாறுவது இயல்பான ஒன்று. அப்படிப்பட்ட மாற்றங்களுக்கு இடையில் காணாமல் போவதும், சிக்கித் தவிப்பதும் அவரவர் அடையாளங்கள் தான். நமது அடையாளங்களுள் ஒன்றான வேட்டிக்கு அந்த நிலை வராமல் காப்பது நமது கையில் தான் உள்ளது.

error: Content is protected !!