*
சர்​வ​தேச கிரிக்கெட் கவுன்​சி​லின் (ஐசிசி) 2018-இன் சிறந்த டெஸ்ட் வீரர்

* சிறந்த ஒரு​நாள் வீரர்

* ஆண்​டின் சிறந்த வீர​ருக்​கான கேரி சோபர்ஸ் விருது

சர்​வ​தேச கிரிக்கெட் கவுன்​சி​லின் (ஐசிசி) 2018-இன் சிறந்த டெஸ்ட் வீரர், சிறந்த ஒரு​நாள் வீரர், மற்​றும் ஆண்​டின் சிறந்த வீர​ருக்​கான கேரி சோபர்ஸ் விருது என 3 (ஹாட்ரிக்) விரு​து​களை ஒரு சேர வென்ற ஓரே வீரர் என்ற சிறப்பை பெற்​றார் இந்​திய அணி​யின் கேப்​டன் கிங் கோலி.
கடந்த 2018-இல் 13 டெஸ்ட் ஆட்டங்​க​ளில் மொத்​தம் 1322 ரன்​கள் (சரா​சரி 55,08), 14 ஒரு நாள் ஆட்டங்​க​ளில் 1201 ரன்​கள் (6 சதங்​கள் உள்​பட, சரா​சரி 133.55) மற்​றும் 10 டி20 ஆட்​டங்​க​ளில் 211 ரன்​களை குவித்​தார் கோலி.
தென்​னாப்​பி​ரிக்கா, இங்​கி​லாந்து, ஆஸி. என அயல்​நாட்டு தொடர்​கள், உள்​ளூ​ரில் நடை​பெற்ற மே.இ.​தீ​வு​கள் தொடர்​க​ளில் அபா​ர​மாக ஆடி​னார் கோலி. இந்​நி​லை​யில் அவ​ருக்கு ஐசிசி ஆண்​டின் சிறந்த டெஸ்ட் வீரர், ஐசிசி ஆண்​டின் சிறந்த ஒரு நாள் வீரர், ஆண்​டின் சிறந்த கிரிக்கெட் வீர​ருக்​கான கேரி சோபர்ஸ் விரு​து​க​ளுக்கு தேர்வு செய்​யப்​பட்​டுள்​ள​தாக ஐசிசி அறி​வித்​தது.
ஓரே நேரத்​தில் இந்த 3 விரு​து​க​ளை​யும் வென்ற முதல் கிரிக்கெட் வீரர் கோலி ஆவார்.
கடந்த 2008-இல் மலே​சி​யா​வில் நடை​பெற்ற ஐசிசி 19 வய​துக்​குட்​பட்​டோர் உல​கக் கோப்​பை​யில் இந்​தி​யாவை சாம்​பி​யன் பட்டம் பெறச் செய்​தார். மேலும் 2018-இல் டெஸ்ட், ஒரு நாள் என இரு வகை​யான ஆட்டங்​க​ளி​லும் 1000-க்கு அதி​க​மாக ரன்​களை குவித்த வீரர் என்ற சாத​னையை படைத்தார்.

​வ​ள​ரும் இளம் வீரர் விரு​து-​ரி​ஷப் பந்த்
2018-​ஆம் ஆண்​டுக்​கான ஐசிசி வள​ரும் வீரர் விருது இந்​திய இளம் விக்கெட் கீப்​பர் ரிஷப் பந்த்​துக்கு வழங்​கப்​ப​டு​கி​றது. 21 வய​தான பந்த் டெஸ்ட் ஆட்டங்​க​ளில் சிறப்​பாக ஆடி​ய​தற்​காக ஐசிசி தேர்வு அகா​தெ​மி​யால் தேர்வு செய்​யப்​பட்​டார்.

இங்​கி​லாந்​தில் அந்​நாட்​டுக்கு எதி​ராக சத​ம​டித்த முதல் இந்​திய விக்கெட் கீப்​பர் மற்​றும் அடி​லெய்ட் டெஸ்​டில் ஆஸி.க்கு எதி​ரான ஆட்டத்​தில் 11 கேட்ச்​களை பிடித்து சாத​னை​யை​யும் சமன் செய்​தார். மேலும் ஆஸ்​தி​ரே​லி​யா​வில் சத​ம​டித்த முதல் இந்​திய விக்கெட் கீப்​பர் என்ற பெரு​மை​யை​யும் பெற்​றார்.

2-​ஆ​வது இடத்​தில் காகிஸோ ரபா​டா​
கேரிசோபர்ஸ் ஆண்​டின் சிறந்த வீரர் விரு​துக்கு கோலி​யின் பெயர் ஒரு மன​தாக தேர்வு செய்​யப்​பட்​டது. தென்​னாப்​பி​ரிக்க வீரர் காகிஸோ ரபாடா இரண்​டா​வது இடத்​தில் உள்​ளார். அதே போல் ஆண்​டின் சிறந்த டெஸ்ட் வீரர் தேர்வு பட்டி​ய​லி​லும் ரபாடா இரண்​டாம் இடத்தை பெற்​றி​ருந்​தார்.

​சி​றந்த நடு​வர் குமார் தர்​ம​சே​னா
அனைத்து அணி​க​ளின்​கேப்​டன்​கள், ஆட்ட நடு​வர்​க​ளால் தேர்வு செய்​யப்​ப​டும் ஆண்​டின் சிறந்த நடு​வ​ருக்​கான டேவிட் ஷெப்​பர்ட் விருது இலங்கை நடு​வர் குமார் தர்​ம​சே​னா​வுக்கு தரப்​பட்​டது.
மைதா​னத்​தில் அணி வீரர்​க​ளுக்கு சிறந்த முன்​மா​தி​ரி​யாக விளங்​கி​ய​மைக்​காக ஐசிசி ஸ்பிரிட் ஆப் கிரிக்கெட் விருது நியூ​ஸி​லாந்து கேப்​டன் கேன் வில்​லி​யம்​ஸ​னுக்கு தரப்​பட்​டது.

இரண்டாம் இடத்தில் ​ரஷீத் கான்​
ஐசிசிஆண்​டின் சிறந்த ஒரு நாள் வீர​ருக்​கான போட்டி​யில் கோலிக்கு பின் ஆப்கானிஸ்தான் இளம் பந்​து​வீச்​சா​ளர் ரஷீத் கான் இடம் பெற்​றி​ருந்​தார்.
கடந்த 2018 ஜன​வரி 1 முதல் டிசம்​பர் 31-ம் தேதி வரை​யி​லான கால கட்டம், விரு​து​கள் வாக்​கெ​டுப்​பின் போது, கோலி தலை​மை​யில் டெஸ்ட் ஆட்டங்​க​ளில் இந்​தியா 6 வெற்றி, 7 தோல்​வியை பெற்​றது. மேலும் ஒரு நாள் ஆட்டங்​க​ளில் 9 வெற்​றி​கள், 4 தோல்​வி​களை பெற்​றது. ஒரு ஆட்டம் டையில் முடிந்​தது.
மேலும் கடந்த ஆண்டு நியூ​ஸி​லாந்​தில் 19 வய​துக்​குட்​பட்​டோர் உல​கக் கோப்​பை​யில் இந்​திய அணி வென்​றது, ரசி​கர்​க​ளின் சிறந்த தரு​ண​மாக தேர்வு செய்​யப்​பட்​டது.

விராட் ​கோலி பெரு​மி​தம்…

3 விரு​து​களை ஓரே நேரத்​தில் பெற்​றது மிக​வும் பெரு​மி​த​மாக உள்​ளது. ஓரே அட்ட​வணை ஆண்​டில் கடு​மை​யாக உழைத்​த​மைக்​காக கிடைத்த வெகு​ம​தி​கள் இவை. என்​னு​டன் இணைந்​துள்ள அணி​யு​டன் பணி​பு​ரி​வ​தில் மிகுந்த மகிழ்ச்​சி​யும், நன்​றி​யும் கொண்​டுள்​ளேன். உலக அள​வில் அது​வும் ஐசிசி சார்​பில் கிடைத்​துள்ள அங்​கீ​கா​ரம் கிரிக்கெட் வீர​ராக என்னை பெருமை கொள்​ளச் செய்​கி​ற​து.​ஏ​னென்​றால் இந்த விளை​யாட்டை மேலும் பல வீரர்​கள் விளை​யா​டு​கின்​ற​னர்.
அனை​வர் மத்​தி​யில் இந்த கெளர​வம் கிடைத்​தி​ருப்​பது, மேலும் இது​போன்ற செயல்​களை செய்ய மிகுந்த ஊக்​கம் தரு​கி​றது. கிரிக்​கெட்​டை​மே​லும் மேம்​ப​டுத்தி, நிலை​யான செயல்​பா​டு​களை அளிக்க வேண்​டும். அந்த வகை​யில் இந்த விரு​து​கள் கூடு​தல் உற்​சா​கமே என்​றார் கோலி.
ஏற்​கெ​னவே கடந்த 2012இல் ஐசிசி ஆண்​டின் சிறந்த ஒரு​நாள் வீரர், கடந்த 2017-இல் கேரி​சோ​பர்ஸ் விருது, ஐசிசி ஒரு​நாள் சிறந்த வீரர் விரு​து​க​ளை​யும் பெற்​றி​ருந்​தார் கோலி என்​பது குறிப்​பி​டத்​தக்​கது.
இது தொடர்​பாக ஐசிசி சிஇஓ டேவிட் ரிச்​சர்ட்​ஸன் கூறி​ய​தா​வது-
சிறந்த ஆட்டத்​தி​ற​னுக்​காக கிடைத்த சிறந்த அங்​கீ​கா​ரம் இது. மேலும் கிரிக்​கெட்​டின் மீதான அவ​ரது மதிப்பு, குறிப்​பாக டெஸ்ட் ஆட்டத்​தின் மீது அவர் கொண்​டுள்ள ஆர்​வத்​துக்கு அளிக்​கப்​பட்ட பரி​சா​கும். நீண்ட ஓவர்​கள் ஆட்டத்​துக்கு அவர் தொடர்ந்து முக்​கி​யத்​து​வம் தரு​கி​றார். அனைத்து வகை​யான ஆட்டங்​க​ளி​லும் அவர் வெற்​றி​க​ர​மான வீர​ராக உள்​ளார். கிரிக்​கெட்​டின் சிறந்த தூது​வ​ராக அவர் திகழ்​கி​றார் என்​றார்.

error: Content is protected !!