நாகர்கோவிலில் தொழில்நெறி வழிகாட்டும் கண்காட்சி மற்றும் கருத்தரங்கு புதன்கிழமை (பிப்.13) நடைபெறுகிறது.
இதுகுறித்து, மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலக உதவி இயக்குநர் வெளியிட்ட செய்திக்குறிப்பு: குமரி மாவட்ட வேலைவாய்ப்புஅலுவலகம்,  அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி இணைந்து, கல்லூரி இறுதியாண்டு பயிலும் மாணவர், மாணவிகளுக்கான தொழில் நெறி வழிகாட்டும் கண்காட்சி மற்றும் கருத்தரங்கை புதன்கிழமை (பிப்.13)காலை 10.30 மணிக்கு, கோணத்திலுள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி வளாகத்தில் நடத்துகிறது.
இக்கண்காட்சி மற்றும் கருத்தரங்கை மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் மு.வடநேரே தலைமை வகித்து தொடங்கிவைக்கிறார்.
இதில், பல்துறைஅரசுஅலுவலர்கள் கலந்துகொண்டு போட்டித் தேர்வுகளுக்கான இலவச பயிற்சி வகுப்புகள், ராணுவத்தில் வேலைவாய்ப்பு, சுயவேலைவாய்ப்பு, தாட்கோ மூலம் வழங்கப்படும் நலத் திட்டங்கள், கடனுதவித் திட்டங்கள், வங்கிப் பணி உள்ளிட்டவை குறித்துசிறப்புரையாற்றுகின்றனர்.
போட்டித் தேர்வுகளுக்கானபுத்தகங்கள், தொழில்நெறி வழிகாட்டும் பல்வேறு தொழில்சார்ந்த விளக்கப் படங்களும் இடம்பெற உள்ளன.
கருத்தரங்கில் கலந்துகொள்ளும் அனைவருக்கும் தொழில்நெறி வழிகாட்டும் கையேடு இலவசமாக  வழங்கப்படுகிறது.
மாவட்டத்திலுள்ளஅனைத்து கல்லூரி மாணவர், மாணவிகளும் கருத்தரங்குக்கு வந்து பயன்பெறலாம் என செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!