குமரி அறிவியல் பேரவை இளம் விஞ்ஞானி மாணவர்களுக்கு மேலாண்மை சிந்தனைகள் திறன் வளர்த்தல் முகாம் மார்த்தாண்டம் அருகேயுள்ள மூடோடு சிக்மா கட்டடக் கலையியல் கல்லூரியில் நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு கல்லூரித் தலைவர் ஜேம்ஸ் வில்சன் தலைமை வகித்தார். கல்லூரி முதல்வர் இந்திரா ஹோலி, கேப்டன் பென்னட் சிங் ஆகியோர் வாழ்த்திப் பேசினர். குமரி அறிவியல் பேரவை அமைப்பாளர் முள்ளஞ்சேரி மு. வேலையன் அறிமுகவுரையாற்றினார். திருவனந்தபுரம் சிஎஸ்ஐஆர் ஆய்வு நிறுவன முதன்மை விஞ்ஞானி பி.டி. ராஜன் நிகழ்ச்சியை தொடங்கிவைத்துப் பேசினார்.
இந்திய விண்வெளி நுட்பக் கல்லூரி இணைப் பேராசிரியை மேரி கிளாடிஸ் சிறப்புரையாற்றினார். இளம் விஞ்ஞானி மாணவி பிரியங்கா நிகழ்ச்சியை ஒருங்கிணைத்தார்.
கல்லூரி உதவிப் பேராசிரியர் ராகவேந்தர், சமூக விஞ்ஞானி எட்வின்சாம், கல்வியாளர்கள் பாலகிருஷ்ணன், ஜான்சன், ஜான் ரபிகுமார் உள்ளிட்டோர் பல்வேறு தலைப்புகளில் பேசினர். சதீஷ்குமார் யோகா, மூச்சுப் பயிற்சி வழங்கினார். ஆசிரியைகள் பபிதா, தீபா ஆகியோர் நிகழ்ச்சியை நெறிப்படுத்தினர்.