சிறந்த படைப்பாளிகளை கவுரவிக்கும் சாகியத்ய அகாடமி விருது வழக்கும் விழா டிசம்பர் 5ம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விழாவில் தமிழகத்தை சேர்ந்த இரண்டு எழுத்தாளர்கள் விருது பெற உள்ளனர்.

இந்திய அளவில் உள்ள சிறந்த படைப்பாளிகளை ஒவ்வொரு ஆண்டும் தேர்வு செய்து அவர்களை கவுரவிக்கும் விதமாக சாகித்ய அகாடமி விருது வழங்கப்படுகிறது. அதன்படி 2018ம் ஆண்டிற்கான பால் சாகித்ய புரஷ்கார் மற்றும் யுவ புரஷ்கார் உள்ளிட்ட விருதுகளை சாகித்ய அகடமி அண்மையில் அறிவித்திருந்தது.

‘ அம்பு படுக்கை ‘ என்ற சிறுகதைக்காக தமிழகத்தை சேர்ந்த எழுத்தாளர் சுனில் கிருஷ்ணனுக்கு சாகித்ய அகாடமி யுவ புரஷ்கர் விருது அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விருதுக்கு மேலும் 10 கவிதை எழுத்தாளர்கள், 3 நாவல் எழுத்தாளர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். அதேபோல் ‘ சிறகு முளைத்த யானை ‘ என்ற கவிதையை எழுதிய கிருங்கை சேதுபதி என்ற எழுத்தாளருக்கு இந்த ஆண்டிற்கான பால் சாகித்ய புரஷ்கர் விருது அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில் டிசம்பர் மாதம் 5ம் தேதி டெல்லியில் சாகித்ய விருது வழங்கும் விழா நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் உள்ள 24 மொழிகளில் தலைச்சிறந்து விளங்கும் நூல்களுக்காக சாகித்ய விருது வழங்கப்பட்டு வருகிறது.

error: Content is protected !!