கன்னியாகுமரி மாவட்டத்தில் 14 அரசு பள்ளிகளில் ரூ. 8.75 லட்சம் மதிப்பில் ஸ்மார்ட் வகுப்பறைகள் தொடக்க விழா திங்கள்கிழமை (டிச.10) நடைபெறுகிறது.

இது குறித்து, அ. விஜயகுமார் எம்.பி. வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: மாநிலங்களவை உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து கன்னியாகுமரி மாவட்டத்தில் 14 அரசு மேல்நிலைப் பள்ளிகளில் ஸ்மார்ட் வகுப்பறைகள் அமைக்க
தலா ரூ. 62 ஆயிரத்து 500 வீதம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.
பணிகள் முடிவடைந்த நிலையில் திங்கள்கிழமை (டிச.10) காலை 9 மணிக்கு அருமநல்லூர் பள்ளியில் தொடக்க விழா நடைபெறுகிறது. இதைத்தொடர்ந்து, குறத்தியறை, செண்பகராமன்புதூர், தோவாளை, தெங்கம்புதூர், பெருவிளை, கொடுப்பைக்குழி, கண்டன்விளை, கண்ணாட்டுவிளை, மத்திக்கோடு, கீழ்குளம், விளவங்கோடு, கடையால், காட்டாத்துறை ஆகிய பள்ளிகளில் தொடங்கப்படுகின்றன. மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் செந்திவேல்முருகன், மாவட்டக்கல்வி அலுவலர்கள், கல்வித்துறை அதிகாரிகள் பங்கேற்கின்றனர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!