சிவகங்கை மாவட்டம், கீழடியில், மத்திய தொல்லியல் துறையினர், மூன்று கட்டங்களாகவும், தமிழக தொல்லியல் துறையினர், ஒரு கட்டமாகவும் அகழாய்வு செய்துள்ளனர். அதில், 14 ஆயிரத்துக்கும் மேற்பட்ட, தொல்பொருட்கள் கிடைத்துள்ளன. இவை, சங்ககால தமிழர்களின் கட்டட மற்றும் நாகரிக சான்றுகளாக உள்ளன.அதனால், தொடர்ந்து ஆய்வு செய்ய, தமிழக தொல்லியல் துறை, மத்திய தொல்லியல் துறையிடம் அனுமதி கோரியது.
மாநில தொல்லியல் துறைகளுக்கு, அகழாய்வுக்கு அனுமதி வழங்கும், ‘கபா’ என்ற அமைப்பு, அடுத்த கட்ட அகழாய்வு செய்வதற்கான அனுமதியை வழங்கி உள்ளது. இது, தமிழ் ஆர்வலர்கள் மற்றும் வரலாற்று ஆய்வாளர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இதுகுறித்து, தொல்லியல் துறை அதிகாரிகள் கூறியதாவது:ஏற்கனவே, கீழடியில் நாங்கள் அகழாய்வு செய்து, தொல்பொருட்களை ஆவணப்படுத்தும் பணியில் ஈடுபட்டுள்ளோம். மத்திய அரசு, அடுத்த கட்ட அகழாய்வுக்கு அனுமதி வழங்கியுள்ள நிலையில், தமிழக அரசு, 50 லட்சம் ரூபாய் ஒதுக்கலாம். அகழாய்வு பணி, அடுத்த மாதம் துவங்கும்.இவ்வாறு, அவர்கள் கூறினர்.
சென்னை:கீழடியில், அடுத்த கட்ட அகழாய்வை தொடர, தமிழக தொல்லியல் துறைக்கு, மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.