சென்னை: செய்முறை தேர்வுக்கு முன், மாணவர்களுக்கு முறையான பயிற்சி வழங்க வேண்டும்’ என, முதுநிலை ஆசிரியர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.பத்தாம் வகுப்பு முதல் பிளஸ், 2 வரை, மார்ச்சில், பொதுத் தேர்வு நடக்க உள்ளது. இந்த தேர்வுகளில், 25 லட்சம் பேர் பங்கேற்க உள்ளனர். மாநிலம் முழுவதும், 3,000 தேர்வு மையங்கள் அமைக்கப்பட உள்ளன.பொதுத் தேர்வுக்கு முன், அறிவியல் மற்றும் தொழிற்கல்வி மாணவர்களுக்கு, பிப்., 1 முதல், 12க்குள், செய்முறை தேர்வை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது. இதுதொடர்பான, தேர்வுத் துறை உத்தரவு:செய்முறை தேர்வை பெயரளவில் நடத்தாமல், வேறு பள்ளி ஆசிரியரை நியமித்து, மாணவர்களின் திறனை மதிப்பிட வேண்டும். எழுத்து தேர்விலும், உரிய பதில்கள் இருந்தால் மட்டுமே, மதிப்பெண் வழங்க வேண்டும். செய்முறை தேர்வுக்கான நோட்டு புத்தகங்கள், திடீர் ஆய்வு செய்யப்பட வேண்டும். இத்தேர்வை, எழுத, முன்கூட்டியே பயிற்சி வகுப்புகளை, முதுநிலை ஆசிரியர்கள் நடத்த வேண்டும்.இவ்வாறு, அதில் கூறப்பட்டு உள்ளது.