புதுடில்லி: ‘பள்ளிகளில் மாணவர்களை சேர்ப்பதற்கு, ஆதார் எண்களை, பள்ளி நிர்வாகம் கேட்கக் கூடாது’ என, யு.ஐ.டி.ஏ.ஐ., எனப்படும், ஆதார் ஆணையம் எச்சரித்துள்ளது.

‘அரசு திட்டங்களைத் தவிர மற்றவற்றுக்கு ஆதார் எண்ணை கட்டாயமாக்கக் கூடாது’ என, உச்ச நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது. இந்த நிலையில், டில்லியில் உள்ள பள்ளிகளில், மாணவர் சேர்க்கைக்கு, ஆதார் கேட்கப்படுவதாக செய்திகள் வெளியாயின.

இது குறித்து, யு.ஐ.டி.ஏ.ஐ., எனப்படும் ஆதார் ஆணையத்தின் தலைமை செயல் அதிகாரி, அஜய் பூஷண் பாண்டே கூறியதாவது: மாணவர் சேர்க்கைக்கு ஆதார் கொடுக்க வேண்டும் என, பள்ளிகள் கட்டாயப்படுத்தக் கூடாது. ஆதார் இல்லாத மாணவர்களை, பள்ளியில் சேர்க்க மறுக்கக் கூடாது. இது உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக அமைந்து விடும். நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர முடியும்.

அதே சமயம், ஆதார் இல்லாதவர்களையும் பள்ளியில் சேர்த்து, அவர்களுக்கு ஆதார் கிடைப்பதற்கான முகாம்களை, பள்ளிகள் நடத்த வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

error: Content is protected !!