இந்திய குடியரசு தினத்தை சிறப்பிக்கும் வகையில்., நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருக்கும் துணிச்சலான குழந்தைகளை தேர்ந்தெடுத்து., அவர்களின் சகாச வீரத்துக்கு “தேசியளவிலான வீர தீர விருதுகள்” வழங்கப்பட்டு வழக்கம். அந்த வகையில்., பாரத் விருது., கீதா சோப்ரா விருது., சஞ்சய் சோப்ரா விருது., பொது வீர தீர விருது மற்றும் பாபு கைதானி விருது போன்ற விருதுகள் வழங்கப்படுகின்றன.
அந்த வகையில்., சென்ற வருடத்தின் விருதுகள்., 13 சிறுவர்கள் மற்றும் 8 சிறுமிகள் என்று மொத்தமாக 21 பேர் தேசிய வீர தீர விருது பெற்றனர். இந்த விருதுகளில் கீதா சோப்ரா விருதானது குழந்தைகளின் வீரத்தில் ஏற்பட்ட இறப்பிற்கு வழங்கப்படுவது வழக்கம்.
சென்ற வருடத்தில் இந்த விருதானது டெல்லியை சார்ந்த நிஷிதா என்ற 15 வயதுடைய சிறுமிக்கு வழங்கப்பட்டது.
இந்த வருடம் நடைபெறும் விருது வழங்கும் நிகழ்ச்சிக்கு தேர்வு செய்யப்பட்ட சிறுவர் மற்றும் சிறுமிகளுக்கு ரொக்க பரிசு., பதக்கங்கள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்படவுள்ளன. அவர்கள் அனைவருக்கு விருதுகள் வழங்கப்பட்ட பின்னர் குடியரசு தின விழாவில் அவர்கள் கலந்துகொள்வார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.