மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வுக்கான (சி.டி.இ.டி.) அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
இதுகுறித்து சி.டி.இ.டி. வெளியிட்ட அறிவிப்பு: கேந்திரிய வித்யாலயா போன்ற மத்திய அரசுப் பள்ளிகளில் ஆசிரியர் பணியில் சேர, சி.டி.இ.டி என்ற தகுதித் தேர்வு மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (சி.பி.எஸ்.இ.) சார்பில் நடத்தப்படுகிறது.
2019 ஆம் ஆண்டுக்கான இந்தத் தேர்வு ஜூலை 7 ஆம் தேதி நடத்தப்பட உள்ளது.
இதற்கான ஆன்-லைன் விண்ணப்ப நடைமுறை செவ்வாய்க்கிழமை தொடங்கியது. விண்ணப்பிக்க மார்ச் 5 கடைசி நாளாகும்.
இந்தத் தேர்வு இரண்டு தாள்களைக் கொண்டது. 5 ஆம் வகுப்பு வரையிலான ஆசிரியர் பணிக்கு முதல் தாள் மட்டும் எழுதினால் போதுமானது.
எட்டாம் வகுப்பு வரையிலான ஆசிரியர் பணிக்கு இரண்டு தாள்களும் எழுத வேண்டும்.
இதில் ஒரு தேர்வை மட்டும் எழுத விரும்பும் பொதுப் பிரிவினர் ரூ. 700 கட்டணமும், இரண்டு தாள்களும் எழுத விரும்புபவர்கள் ரூ. 1200 கட்டணமும் செலுத்த வேண்டும்.
எஸ்.சி., எஸ்.டி. பிரிவினர் ஒரு தாளுக்கு ரூ. 350 கட்டணமும், இரண்டு தாள்களுக்கு ரூ. 600 கட்டணமும் செலுத்தவேண்டும்.
மேலும் விவரங்களுக்கு www.ctet.nic.in என்ற இணையதளத்தைப் பார்த்துத் தெரிந்துகொள்ளலாம்.