அடுத்த ஆண்டு முதல் தமிழகம் முழுவதும் ஒரே கல்விமுறை அமல்படுத்தப்படும் என பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் சனிக்கிழமை தெரிவித்தார்.

இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் அவர் மேலும் கூறியதாவது:

அடுத்த கல்வியாண்டு முதல் தமிழகம் முழுவதும் ஒரே கல்விமுறை அமல்படுத்தப்படும். 8-ம் வகுப்பு முதல் 10-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு சிறிய அளவிலான மடிக்கணினி வழங்கப்படும் . அரசு பள்ளி மாணவ, மாணவிகள் 1,000 பேர் வரையில் மருத்துவப் படிப்பில் சேர்ப்பதே அரசின் லட்சியம்.

12-ம் வகுப்பு வணிகவியல் படிக்கும் மாணவ, மாணவிகள் 500 பேர் வரை ஆடிட்டிங் பிரிவு பட்டப்படிப்பில் சேர்க்க ஏற்பாடு நடைபெற்று வருகிறது என்று தெரிவித்தார்.

error: Content is protected !!