கன்னியாகுமரி மாவட்டத்தில் 29,387 மாணவர்களுக்கு விலையில்லா மடிக்கணினி வழங்கப் பட்டுள்ளது என ஆட்சியர் பிரசாந்த் மு.வடநேரே தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து, ஆட்சியர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: தமிழகத்தில் அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் மாணவர்கள் இடைநிற்றலை தவிர்க்கவும், தொடர்ந்து கல்வி பயிலும் வகையிலும் அரசு விலையில்லா சைக்கிள் மற்றும்
அனைவருக்கும் இலவச கல்வி கட்டாயம் அளிக்கப்பட வேண்டும் என்ற நோக்கத்தில் அவர்களுக்கு பல்வேறு திட்டங்களை அரசு செயல்படுத்தி வருகிறது.
இம்மாவட்டத்தில் அரசு , அரசு உதவிபெறும் பள்ளிகளில் பயிலும் 29 , 387 மாணவர்களுக்கு விலையில்லா மடிக்கணிணி,
2016 முதல் இதுவரை 30,453 மாணவர்களுக்கு சிறப்பு ஊக்கத்தொகை, 1.46 லட்சம் மாணவர்களுக்கு சீருடைகள்,
கடந்த 2 ஆண்டுகளில் 37,118 மாணவர்களுக்கு விலையில்லா சைக்கிள், 6 முதல் 10 ஆம் வகுப்பு வரை பயிலும் 22,375 மாணவர்களுக்கு புவியியல் வரைபடம், 2.87 லட்சம் மாணவர்களுக்கு புத்தகப்பை, 60,559 மாணவர்களுக்கு கணித உபகரணங்கள், 2.19 லட்சம் மாணவர்களுக்கு காலணிகள் ஆகியன வழங்கப்பட்டுள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.