திருநெல்வேலி: ”நெல்லை, மதுரை, கரூர் அரசு மருத்துவக் கல்லுாரிகளில், 2019ம் ஆண்டு, எம்.பி.பி.எஸ்., படிப்புகளுக்கு, 350 இடங்கள் கூடுதலாக உருவாக்கப்பட்டுள்ளன,” என, சுகாதாரத் துறை செயலர், ராதாகிருஷ்ணன் கூறினார்.திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லுாரி வளாகத்தில், 150 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்ட, ‘சூப்பர் ஸ்பெஷாலிட்டி’ மருத்துவமனையை நேற்று பார்வையிட்ட அவர் அளித்த பேட்டி:திருநெல்வேலி உயர் சிறப்பு மருத்துவமனை கட்டுமான பணிகள், ஜனவரி இரண்டாவது வாரத்தில் முழுமை அடையும். இங்கு, 450 சிறப்பு டாக்டர் பணியிடங்கள், 160 நர்சிங் பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. 330 படுக்கை வசதி உள்ளது.முதலில், எட்டு வகையான சிறப்பு பிரிவுகள் இயங்கும். தொடர்ந்து, படிப்படியாக பிற வசதிகள் செய்யப்படும். தமிழகத்தில், 2019ல், முதுநிலை மருத்துவ படிப்பில், 44 இடங்கள் அதிகரிக்கப்படுகின்றன.நெல்லை, மதுரை அரசு மருத்துவ கல்லுாரிகளில், தலா, 100 எம்.பி.பி.எஸ்., இடங்கள் கூடுதலாகவும், புதிதாக அமைக்கப்பட்டு உள்ள, கரூர் மருத்துவக் கல்லுாரியில், 150 இடங்களும் உருவாக்கப்பட்டுள்ளன. இதன் மூலம், 2019ம் ஆண்டில், 350 இடங்கள் கூடுதலாக கிடைக்கும்.மதுரையில், ‘எய்ம்ஸ்’ மருத்துவமனை பணிக்கு, மண் பரிசோதனை உள்ளிட்ட பணிகள் முடிந்து விட்டன. நெல்லை தனியார் மருத்துவமனையில், பெண்ணுக்கு நடந்த அறுவை சிகிச்சையில், தவறு செய்தவர்கள் மீது, தமிழ்நாடு மருத்துவ கவுன்சில் விதிகளின்படி நடவடிக்கை எடுக்கப்படும்.இவ்வாறு, அவர் கூறினார்.

error: Content is protected !!