உத்தரப்பிரதேச மாநிலத்தில் நடைபெறும் அகில இந்திய ஹாக்கி போட்டியில், தமிழ்நாடு ஹாக்கி அணிக்காக விளையாட லட்சுமி அம்மாள் ஸ்போர்ட்ஸ் அகாதெமி ஹாக்கி அணி வீரர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
உத்தரப்பிரதேச மாநிலம், லக்னெளவில் நடைபெறவுள்ள 14 வயதுக்குள்பட்ட அகில இந்திய ஹாக்கி போட்டியில், லட்சுமி அம்மாள் ஸ்போர்ட்ஸ் அகாதெமி ஹாக்கி அணி வீரர்களான கே.பாரத், ஆர்.ஆகாஷ், டி.குருமூர்த்தி, பி.பர்வீன்ராஜா, எம்.ஆனந்த் ஆகியோர் தமிழ்நாடு ஹாக்கி அணிக்காக விளையாட தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
தமிழ்நாடு ஹாக்கி அணிக்காக தேர்வு செய்யப்பட்டுள்ள ஹாக்கி அணி வீரர்களை கே.ஆர். கல்வி நிறுவனங்களின் நிர்வாக இயக்குநர் கே.ஆர்.அருணாசலம், நேஷனல் பொறியியல் கல்லூரி இயக்குநர் சொக்கலிங்கம், கல்லூரி முதல்வர்கள் சண்முகவேல் (நேஷனல் பொறியியல் கல்லூரி), ராஜேஸ்வரன் (லட்சுமி அம்மாள் பாலிடெக்னிக் கல்லூரி), கண்ணப்பன் (கே.ஆர். கலை மற்றும் அறிவியல் கல்லூரி) மற்றும் கே.ஆர். கல்வி நிறுவனங்களின் உடற்கல்வி இயக்குநர்கள், லட்சுமி அம்மாள் ஸ்போர்ட்ஸ் அகாதெமி ஹாக்கி பயிற்சியாளர்கள் ஆகியோர் பாராட்டினர்.

error: Content is protected !!