சென்னை,செயற்கை அறிவு திறன் தொடர்பான செயலியை உருவாக்குவதற்கான சிறப்பு பயிற்சி வகுப்பை, சென்னை, ஐ.ஐ.டி., அறிவித்துள்ளது.இதுகுறித்து, அந்த நிறுவனம் வெளியிட்ட செய்திக்குறிப்பு:செயற்கை அறிவு திறன் என்ற, ‘ஆர்டிபீசியல் இன்டலிஜென்ஸ்’ தொடர்பான தொழில்நுட்பம் பெருகி வருகிறது, இதுகுறித்து, தொழில் துறைகளில் அதிக தேவையுள்ளது. இதன் அடிப்படையில், சென்னை, ஐ.ஐ.டி., சார்பில், குறுகிய கால பயிற்சி வகுப்பு நடத்தப்பட உள்ளது.இதில், கணிதம், ‘பைத்தான் சாப்ட்வேர்’ பாடங்களின் அடிப்படையை தெரிந்த, பள்ளி, கல்லுாரி மாணவர்கள், பணியில் இருப்போர் பங்கேற்கலாம்.மாணவர்களுக்கு, 1,000 ரூபாய்; பணியில் உள்ளோருக்கு, 5,000 ரூபாய் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. பயிற்சியில் சேர விரும்புவோர்,padhai.onefourthlabs.inஎன்ற இணையதளத்தில் பதிவு செய்யலாம்.இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.