குமாரகோவில் நூருல் இஸ்லாம் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற வேலைவாய்ப்பு முகாமில்  தேர்வு செய்யப்பட்ட 431 பேருக்கு பணி நியமன ஆணை திங்கள்கிழமை வழங்கப்பட்டது.
நூருல் இஸ்லாம் பல்கலைக் கழகம் , பெங்களூரு பிரெஷேர்ஸ் வேலைவாய்ப்பு நிறுவனம்  சார்பில் தென்தமிழகத்தில் உள்ள இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில் நடத்தப்பட்ட இம்முகாமில் பட்டப்படிப்பு,  பட்டயப் படிப்பு, பொறியியல் பயின்ற இளைஞர்கள் 2,000 க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
இந்தியாவில் முன்னணி வகிக்கும் 22 நிறுவனங்களின் மனிதவளம் மற்றும் தொழில்நுட்ப வல்லுநர்கள் நேர்முகத் தேர்வு மூலம் 431 பேரை தேர்வுசெய்தனர். இதையடுத்து, நடைபெற்ற நிகழ்ச்சியில் தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு அந்தந்த நிறுவனங்கள் சார்பில் பணி நியமன ஆணை வழங்கப்பட்டது. தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு இப்பல்கலைக்கழக வேந்தர் ஏ.பி. மஜீத்கான்,  துணைவேந்தர் இரா. பெருமாள்சாமி, பதிவாளர் திருமால்வளவன், வேலைவாய்ப்பு பயிற்சித்துறை  இயக்குநர் சிவதாணுபிள்ளை ஆகியோர் வாழ்த்து தெரிவித்தனர்.

error: Content is protected !!