ஆசிரியர்கள் மாணவர்கள் மனதில் தன்னம்பிக்கையை ஏற்படுத்த வேண்டும் என்றார் மத்திய நிதி மற்றும் கப்பல் துறை இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன்.
கன்னியாகுமரி மாவட்ட பாஜக சார்பில் மாவட்ட வளர்ச்சிக்காக ஆசிரியர்களுடனான கலந்துரையாடல் கூட்டம் நாகர்கோவிலில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
கூட்டத்துக்கு தலைமை வகித்து மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் பேசியது: கன்னியாகுமரி மாவட்ட வளர்ச்சிக்காக மத்தியஅரசு பல்வேறு வளர்ச்சித் திட்டப் பணிகளை நிறைவேற்றியுள்ளது. இம்மாவட்டத்தில் துறைமுகம் அமைந்தால் அபரிமிதமான வளர்ச்சி பெறும். தற்போது படித்த இளைஞர்கள் வேலைதேடி வெளி மாவட்டங்களுக்கும், வெளி மாநிலத்துக்கும் செல்கின்றனர். துறைமுகம் வந்தால் அவ்வாறு செல்லவேண்டிய நிலை இருக்காது. படித்த இளைஞர்கள் சொந்த தொழில் தொடங்க அச்சப்படுகின்றனர். சவாலை சந்திக்க தயாராக இருப்பதில்லை. ஆசிரியர்கள்தான் மாணவர்கள் மத்தியில் தன்னம்பிக்கையை விதைக்க வேண்டும் என்றார் அவர்.

error: Content is protected !!