நாட்டின் 70-ஆவது குடியரசு தினம்: தேசியக் கொடி ஏற்றினார் ஆளுநர்

நாட்டின் 70-வது குடியரசு தினத்தை முன்னிட்டு சென்னை காமராஜர் சாலையில் நடந்த குடியரசு தின விழாவில் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் தேசியக் கொடியை ஏற்றினார். தேசியக் கொடி ஏற்றப்பட்ட போது ஹெலிகாப்டர் மூலம் மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது.

இதையடுத்து, குடியரசு தினத்தையொட்டி நடைபெறும் முப்படை வீரர்கள், காவல்துறை மற்றும் பல்வேறு படை பிரிவுகளின் அணிவகுப்பு மரியாதையை ஆளுநர் ஏற்கிறார்.

இவ்விழாவில் தமிழக முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர்கள், தலைமைச் செயலர் கிரிஜா வைத்தியநாதன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

error: Content is protected !!