இந்தியாவின் சுற்றுலா பயணிகளுக்காக அனைத்து நாட்டின் மக்களையும் வெகுவாக கவர டெல்லியில் பல ஏக்கர் பரப்பளவு கொண்ட நிலப்பரப்பு ஒன்று பார்க் போல் மாற்றியமைக்கப்பட்டு, அங்கு உலகின் ஏழு அதிசயங்கள் வடிவமைக்கப்பட்டுள்ளது.  இதில் டெல்லியின் ஆக்ராவில் உள்ள தாஜ்மஹால், ரியோ டி ஜெனிரோவின் கிறிஸ்து மீட்பர் சிலை, பாரிசின் ஈஃபில் டவர், ரோம் நாட்டின் கொலோசியம், இத்தாலியின் பிசா சாய்ந்த கோபுரம் மற்றும் கிசாவின் பிரமீடு ஆகியவற்றின் வடிவமைப்புகளை கொண்டு அமைக்கப்பட்டுள்ளது.

இந்த வடிவமைப்புகள் ஸ்கிராப் ஆட்டோமொபைல் பாகங்களை கொண்டு அமைக்கப்பட்டுள்ளது. தெற்கு டெல்லி கார்ப்பரேஷன்  இதற்கான பணியில் ஈடுபட்டுள்ளது. இவற்றில்  ஏற்கனவே பழைய சோடியம் விளக்குகள் பொருத்தப்பட்டு பார்வைக்கான சோதனைகள் செய்யப்பட்டதாகவும், இறுதியாக பல வண்ண விளக்குகள் கொண்டு அலங்கரிக்கப்பட்டு பொதுமக்களுக்கு காட்சிப்படுத்தப்படும் எனவும்  தோட்டக்கலை இயக்குனர் அலோக் குமார் கூறியுள்ளார்.

இந்நிலையில் டெல்லி கார்ப்பரேஷன் மூன்று சோலார் மரங்களை இயற்கையின் அழகை பிரதிபலிக்கும் வகையில் பொருத்தியுள்ளது. அனைத்து விளக்குகளும்  6 கிலோ வாட் கொண்டவை ஆகும். இந்த பார்க் அப்பகுதி மக்களிடையே பெரும் வரவேற்பை பெரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதையடுத்து அடுத்த வாரம் பொதுமக்கள் பார்வைக்காக திறக்கப்படும் என கூறப்படுகிறது

error: Content is protected !!